உற்ச்சாக ஏமாற்றம்

மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்

எழுதியவர் : (3-Dec-13, 2:59 pm)
சேர்த்தது : Ayidan
பார்வை : 82

மேலே