வல்லமை அருள்வாயே
தேடிக் குறைகள் நிதம் சொல்லி
பிறர் வாடப் புறம் பேசி
அழுக்காறு அகம் கொண்டு
பொய்யுரைத்து பூசல் செய்யும்
சில பேடி மனிதர்களால் நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ ! – இறைவா
நின்னை சில வரங்கள் கேட்பேன்
இனிதே அவை அளித்திடல் வேண்டும்
முன்னை என் அல்லவை நீக்கி
பின்னை என் மனம் நிலை நிறுத்தி
நல்லவை மட்டுமே நாடி - நாளும்
நயம்பட காரியம் ஆற்ற
வல்லமை அருள்வாயே !
( மஹாகவி பாரதியின் வரிகளைத் தழுவி )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
