மனதை வளமாகும் பொன்மொழிகள் 03

பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல பணத்தைப் போட்டுத்தான் பணத்தை ஈட்ட வேண்டும்.

*****
தன்னிடம் குவிந்த செல்வத்தை,தானும் அனுபவியாமலும்,நற்காரியங்களுக்கு செலவிடாமலும் இருப்பவன் சுகம் பெற மாட்டான்.அவன் பணம் படைத்த முட்டாள்.

*****
சிங்கத்துக்கு முடிசூட்டு விழாவோ,சடங்குகளோ விலங்குகள் செய்து வைக்கவில்லை.தன்னுடைய பராக்கிரமத்தால் அல்லவோ சிங்கம் அரச பதவி வகிக்கிறது?

********
பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.

***************
சமய சந்தர்ப்பம் தெரியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் வெகுமதி பெறாமல் போவது மட்டும் அல்லாமல் வெறுப்பையும் தேடிக் கொள்கிறான்.

எழுதியவர் : பஞ்ச தந்திரக் கதைகள் (3-Dec-13, 5:32 pm)
பார்வை : 101

மேலே