என்ன சொல்கிறாய் அன்பே

விடுமுறை காலம் ..

சிறகுகள் பர பரவென இருக்க , இருப்பு கொள்ளுமா ,
காதல் கொள்ள கிரேக்க நாடு செல்வோம, இல்லை நைல் நதியில் மிதப்போம ,
உன் அழகும் என் அழகும் குழைத்து
வானவில்லிற்கு நம் காதல் வண்ணத்தை கடனாய் கொடுக்கும் காலம் ,
விண்வெளியை துளைத்து அங்கு காதல் கால் படிக்கும் காலம் ,
கைசேர்த்து , தோல் சாய்ந்து , வெப்பம் சமைத்து
குளிருக்கு போர்வை உண்டாக்கும் காலம் ,
விடியலை இரவினுள் சிறைவைத்து சந்திரனை
24 மணி நேரம் காவலுக்கு வைக்கும் காலம் ,
தொலை தொடர்பு இல்லை , கைபேசி இல்லை ,
கணிப்பொறி இல்லை ,தொல்லை இல்லை ,
நாம் என்று நமக்காக சிறிது நேரம் காதலர்களாக வாழும் காலம் ,
என்ன சொல்கிறாய் அன்பே ? தயார் ஆகலாமா ?

எழுதியவர் : Aswini (3-Dec-13, 6:38 pm)
பார்வை : 123

மேலே