இருக்கட்டும் விடுங்கள்
எப்படியோ தோன்றிவிடுகிறது
தோன்றுவதே
அபூர்வம்தான் என்கிறேன்
தோன்றுவதும் அதைவிட
அபூர்வம்தான் என்கிறேன்
காரணங்கள் ஏதுமில்லை
ஆனாலும்
இருந்தாலும் இருக்கலாம்
எங்கிருந்து வந்ததென்றும்
கேட்காதீர்கள்
உங்களில் இருந்தும் வரலாம்
உங்களால் வரலாம்
உங்களுக்காகவும் வரலாம்
எப்படியோ இருக்கட்டும்
இருக்கிறபடி
இருந்து விட்டுப் போகட்டும்
நல்லதுதான்
எதற்கு என்று கேட்காதீர்கள்
தவழும் என்னைப் போலவும்
தாவும் உங்களைப் போலவும்
தழுவும் அவர்களைப் போலவும்
பல முகங்களாய் தோன்றலாம்
அவைகளைப்
பிடித்துக் கொள்வோம்
கவிதைகள் நமக்கானதென்று !
காலத்திற்கானதென்று !!