===+++புத்தன் சிரிக்கிறான்+++===
புத்தன் சிரிக்கிறான்;
சாதி மதங்களால்
போதிமரங்களுக்கு
குருதி பாய்ச்சுகிற
குரோதத்தை எண்ணி...
புத்தன் சிரிக்கிறான்;
உடல்களை உரங்களாக்கி
ஊன்றப்படுகிறது
போதி மரம்...
ஆம்....!
தூக்கிலடப்படுகின்றன
அதன் கிளைகளில்
போதனைகள்...
அந்த மரத்திலிருந்து
உதிருகின்ற விதைகள்,
பூமியையேப் புணரும்
அருவெறுத்த ஆண்குறிகளாய்...
புத்தன் சிரிக்கிறான்;
கண்ணகியின் கதறல்களும்
சீதைகளின் சாபங்களும்
அவனுக்கு
வசிய மந்திரங்களாய்...
புத்தகங்கள் சுமந்த புத்தர்கள்
புதைந்த இடம்
சதைகளே சகதிகளாய்
இன்றும் நாருதங்கே...
புத்தன் சிரிக்கிறான்;
ஓ....!
அவன்
ஏவுகணைகளில்
ஏறிச்சென்று
எமனோடு
ஒப்பந்தம் செய்கிறான்...
பிணங்களையேத் தின்று
பிணங்களுக்கு மத்தியிலே
இன்றும் தொடருகிறது
அவனது தியானம்...
அகிம்சைத் தேசத்திடம்
ஆயுதம் வாங்கி
மரணங்களை
புனிதங்கள் என்கிறான்...
ஆம்...
'இந்த' புத்தன் சிரிக்கிறான்;
குருவிகளின் கூடு களைத்து
குளவிகள் கூடுகட்டுவதை எண்ணி
''அந்த''
உண்மையான
கௌதம புத்தன்
அழுதே கரைகிறான்...!!!
------------------நிலாசூரியன்.