ஏழைக்கு விளையாட
நிலையில்லா வாழ்க்கைப் பயணத்தில்
ஏழைக்கு வசதியில்லை ....!!
உலை கொதிக்கும் நீர்போலே
உள்ளத்தில் அமைதியில்லை ....!!
சிலைமீதில் வெயில் மழையாய்
சிறிதேனும் சொரணையில்லை ...!!
இலை மேலே பனித்துளியாய்
இம்மியும் ஒட்டவில்லை ....!!
விலைகொடுத்து பந்து வாங்க
பையில் பணமில்லை ....!!
தலைதட்டும் எம்பி குதிக்க
குடிசையில் இடமில்லை ...!
அலைகடல் கரையே ஆடுகளமாய்
ஆனதில் வியப்பில்லை ...!!
தொலைவில் இருக்கும் பரிதியே
பந்தானதில் தவறில்லை ...!!