கவலை
"காலைல அரை வயித்து கஞ்சி இருந்தா போதும்யா நான் பொழுது சாயிற வர வேலை பார்ப்பேன்"
"ராப்பகலாய் வேல செஞ்சு என்ன செய்ய என் மகன் நெனச்ச படிப்ப படிக்க வைக்க முடியலையே"
"ஒன்னாம் வகுப்பு படிச்சு முடிச்சதுமே இந்த கலப்பைய புடிச்சவன் தான் ஆனா இன்னும் ஒண்டி படுக்க ஒரு இடம் வாங்க முடியல"
"நாற்பது வருஷமா இங்க கல் ஒடைக்கிறேன் ஆனா இன்னும் என் மகளுக்கு கல்யாணம் பண்ண முடியலையே"
-இப்படி உறிஞ்சப்படுபவர்களிடம் இருந்து வரவேண்டிய புரட்சி வராததால், வருகிறது
"கவலை"எனக்கு.