நிறை குடம் தளும்பாது
வாழ்கையில் பலவற்றைக் கண்டேன்
மிகச் சிலவற்றைக் காணவில்லை
கண்டவற்றில் சிறப்புகள் குறைவு
குறைகள் பெரிதும் கண்டேன்
காணாத சிலவற்றில் நிறை நிரம்ப உண்டு
அதனால் காண முடியவில்லை
என்றும் நிறைந்தவை வெளியே தெரியாது
நிறை குடம் தளும்பாது என்று பழமொழிக்கு ஏற்ப
நிறைவானவை அடக்கம் சூழ அழகான முறையில்
தன இருப்பிடத்தைக் காண்பிக்க
மனது நிறைவுடன் நாம் ரசித்து
செம்மையான வழியில் செல்வோம்