மனிதம் மலர்ந்தால்புனிதம் பிறக்கும்
மேகம் திறந்தது வானம்
மெல்ல விழுந்தது வெளிச்சம்....!
இதழைத் திறந்தது மலர்கள்
இனிமை மலர்ந்தது உலகில்.....!
இதயம் திறந்தது மனிதம்
இறைவன் வந்தான் அருகில்....!
மனதை திறந்தான் அவனும்
மனிதனை மனதில் அமர்த்த...!
வாசல் திறந்தது சொர்க்கம்
வசந்தம் வந்தது மண்ணில்....! - மன
இமைகள் திறந்தால் உனக்கும்
இதயம் கோவிலாய் இருக்கும் - இனி
சிரிப்பைத் திறப்போம் இதழில் - கவலைச்
சிந்தனை தன்னை ஒழிப்போம்....!
வாழ்க வளமுடன்
அன்புடன் ஹரி