எங்கள் தாயே

பல மதங்கள் ..
பல இனங்கள் ...
பல மொழிகள் ...
இணைகின்றோம் என்றும் இந்தியர்கள் என்று..

பாரத தாயே !
எங்கள் ரத்தத்தில் பேதமில்லை...
எங்கள் வீரம் என்றும் குறைந்ததில்லை..
சீண்டி பார்பவர்களை விட்டதில்லை ...
சீறிவரும் காளை முன் யாரும் நின்றதில்லை..

உம் பிள்ளைகள் என்பதில் மகிழ்ச்சி..
உம் பெயர் சொன்னால் எழச்சி.....
எங்களுக்கு எங்கும் இல்லை எல்லை....
உம்மை என்றும் மறப்பதில்லை...

கவிதையில் உம்மை பாட வயதில்லை...
வணங்குவதை தவிர வேறொன்றும் இல்லை..

கங்கையை தலையில் கொண்டவள் நீ ...
தரணி எங்கும் செல்லும் வற்றாத நதிநீர் நீ ..
மயிலின் வண்ணம் கொண்டவள் நீ..
எங்கள் வீரத்தின் முத்திரை நீ...

விலை இல்லா பொக்கிஷம் நீ ....
உம் வயிற்றில் பிறந்த வர்ணங்கள் நாங்கள்...
மூன்று கடல்களை கொண்டவள் நீ ...
முப்படையை வைத்து காப்பவள் நீ

எங்கள் ரத்தத்தில் கலந்தவள் நீ ...
எங்கள் ரத்தத்தின் உணர்ச்சி நீ.....
ஒரே உணர்வு கொடுத்தவள் நீ...
உயிருள்ளவரை எங்களின் உள்ளத்தில் குடி கொண்டிருப்பவள் நீ.....

எங்கள் பாரத தாயே ...
எங்களுள் இருப்பவள் நீயே ...

எழுதியவர் : சாமுவேல் (7-Dec-13, 1:38 pm)
Tanglish : engal thaayaye
பார்வை : 101

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே