கண்ணீரின் கண்ணீர்
என் விண்மீன் துரத்தில் தொலைந்து போக
வெளிச்சம் காணமல் கண்ணீர் வழிந்த கண்களும் பூத்து போயின
பசுமைமாறக் காடுகளும் இன்று வாடி வெறிச்சோடி போயின
வெட்ட வெளிகளில் சுற்றி திரியும் உன் மழலை சிரிப்பை தவறிய பூந்தோட்டமும்
இன்று வறண்டு போயின
காரணம் அறிய பேதை நானும் வழி அரியது வலி
சுமக்கிறேன் உனக்காக
புன்னகை காற்று ஒரு நிமிடம் என்னுள் வீசி போக
கண்ணீரின் அலை நித்தம் தொட்டு போகிறது
என்னை
கனிவோடு கரம் தர என்னுள் ஒரு தோழியை தேடி பிடித்து என் வானின் வின்மீனாக்கினேன்
இன்று
அவ்விண்மீன்
என் கண்களில் வழியும் நீரில் மறைந்து விட்டதோ
இல்லை
என் வானை விட்டு அகன்றுவிட்டதோ
காரணம் புரியாமல் நான் மட்டும் இருளில்
என் கண்ணீர் துளிகள் கூட கண்ணீரில்!!!!!
என்றும் உங்கள்
உமா நிலா