கேளாய் மானுடமே
கேளாய் மானுடமே !!!
நிலவிற்கு வளர்வதில்
இருக்கும் சுகம்
தேய்வதில் இருப்பதில்லை !!!
வலையில் சிக்கும்
மீனின் கண்ணீர்
மீனவனுக்கு தெரிவதில்லை !!!
பிறக்கும்போது இருந்த வால்
வளரும்போது இல்லை என
தவளைக்கு தெரிவதில்லை !!!
கண்ணை காக்கும்
இமையின் வருத்தம்
கண்களுக்கு தெரிவதில்லை !!!
தோகையில்இருக்கும் அழகு கால்களில்இல்லையென
மயிலுக்கு தெரிவதில்லை !!!
முல்லைக்கு
தேர் தந்த மன்னவனை
முல்லைக்கொடி அறிந்ததில்லை !!!
நெஞ்சத்தை கொள்ளை கொண்ட
குமரியின் உள்ளத்தை
கோமகன் அறிந்ததில்லை !!!
உயரத்தின் உச்சியை
தொட்டவன்வந்த பாதையை
திரும்பி பார்ப்பதில்லை !!!
தோல்வியை கண்டு
துவள்பவனுக்குவெற்றி அருகில்
இருப்பது தெரிவதில்லை !!!
விதைக்கின்ற காலங்களை வீணடித்து விட்டே
அறுவடை காலங்களில் ஆகாயத்தை பார்த்தே
ஆத்திரப்படுவதில்அர்த்தமில்லை !!!
மழைகாலம் வரும்முன்னர்
இரையை சேர்க்கும் எறும்பின்
திறமை மானிடர்க்கு ஏன் இருப்பதில்லை !!!