சில உளறல்கள்...!

* அன்பின் அர்த்தமதை அன்னைக்கு அடுத்து
எனக்கு காட்டியவளே....!!
* என் சிந்தையின் ஒவ்வொரு செல்லிலும் அமர்ந்து
நாளும் எனை சிறைபிடிப்பவளே...!!
நலமா நீ.....?
நம்புகிறேன் நலம் என்று....!!
* தெரியுமா உனக்கு....??
உன் உன்பிற்கு அடிமையான இந்த
ஆடவனின் அவஸ்தைகள்....!!
கேள்....!!
* உன்னோடு உரையாடாமல் இருக்கும்
என் ஒவ்வொரு நொடியும்
சத்தமின்றி ரத்தம் சிந்துகின்றன...!!
* மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்ற
பயத்தில் அழுகையைக் கூட
புதைத்துக் கொள்கிறேன் என்னுள்....!!
என் உதடுகளின் உதவியோடு.....!!
* படுக்கையில் நான் கிடக்கும் பொழுது
உன் இனிய கனவுகள் வந்து
கண்ணீரால் என் தலையணையை
ஈரமாக்கிச் செல்கின்றன....!!
* தனிமையில் நொடிகணம் இருந்தாலும்
தகிக்கிறது என் உள்ளம்...!!
எங்கே தற்கொலை செய்து
கொள்வேனோ என்று....!!
* பயப்படாதே...!!
பாதை மாறமாட்டான் இந்த
பைத்தியக்காரன்..!!
* இப்பொழுது தான் எனக்கே தெரிகிறது...!!
என் உள்ளம் கொண்டிருக்கும்
உன் மீதான என் அன்பினை....!!
* எட்ட நின்றாலும் என் எண்ணங்கள்
என்றும் உன் வசமே......!!
ஆம்..!
உன்னை மறக்கும் நொடி தான்
என் மரணம்.....!!
* உன்னோடு உரையாடிய அந்த
ஒவ்வொரு நொடியும்
என் இதயத் துடிப்போடு
இன்னமும் இருக்கிறது....!!
* என் ஒவ்வொரு விடியலும்
உன் நினைவோடு தான்
தொடங்குகின்றன.....!!
என் ஒவ்வொரு இரவும்
உன் நினைவோடு தான்
உறங்குகின்றன...!!
* நீ அறிமுகமான அந்த நொடி
எனக்குத் தெரியாது பெண்ணே....!!
நீ இப்படி வார்த்தைகளாய் என்னுள்
வடிவம் பெறுவாய் என்று.....!!
* ஒரு நொடியேனும் எண்ணிப் பார்...!!
அழகான உன் அன்பில்
தொலைந்து போன என்னை...!!
* இப்படிக்கு...
உன் நினைவுகளில் பிரிவினை மறப்பவன்....!!

குறிப்பு:
தெரியும் எனக்கு...!
வார்த்தைகளாய் இங்கு வடிவம் பெற்று
கிடக்கும் என் வலிகளை வாசித்து விட்டு
வசைப்பாடுவாய் என்னை என்று...!!
அதையும் ரசிக்கிறேன் நான்....!!



எழுதியவர் : ரமணி (28-Jan-11, 4:48 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 573

மேலே