செம்புலப்பெயல் நீராய்

அய்யோ இந்த
வலி………
இந்த வலிகளுடன்தான்
என் வாழ்க்கையா?
வழிகளையும்,
வாய்ப்புகளையும்
மிதித்துக் கொன்று
மீறி எழுந்து
இறுகப் பற்றிக்கொள்ளும்
இவ்வலிகளை
விடாமல்தான்
இருக்கிறது
என் உடல்.
செம்புலப்பெயல் நீராய்….,
தேகத்தில்
கலந்து விட்ட
ஒன்றை என்னதான்
செய்வது!?

எழுதியவர் : aharathi (8-Dec-13, 7:58 pm)
பார்வை : 135

மேலே