வெற்றிக் கொடி நாட்டலாம்
பள்ளி சென்றால் நாமும்
பண்பதனைப் பெறலாம் ;
நண்பனுடன் பழகலாம் ;
நல்ல பண்பை வளர்க்கலாம் ;
கூடி நாமும் வாழலாம் ;
குடிமைப் பண்பைப் பெறலாம் ;
கல்விதனைப் பெறலாம் ;
கலைகள் பல கற்கலாம்;
வாழ்வில் நாமும் உயரலாம் ;
வெற்றிக் கொடிநாட்டலாம்!!!!