வளர் பிறை-6

வெளியில் நின்ற வாட்ச்மேனை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை தினகரன்

வாட்ச்மேன் உள்ளே எட்டி பார்த்தார்

"என்ன சார் இப்படி பண்ணிடீங்க"

"என்னையா பண்ணிட்டேன்,,,,, இது என்ன புதுசா,,,,"

"இல்ல சார் அந்த பொண்ணு வீட்டுல ,,,,,,,,"

"யோவ் சும்மா இழுக்கத அவ செத்துட்டா"- அலட்சியமாகவே சொன்னான் தினகரன்

"என்ன சார் இவ்வளோ சாதரணமா சொல்றீங்க,,,, இது பெரிய பிரச்சனை சார்"

"தெரியும் யா,,,,,,, அதன் என்ன பண்ணலான்னு யோசிக்கிறேன்"

"என்ன சார் பண்ண போறீங்க"

"இவ உடம்ப என்ன ஊறுகாயா போட முடியும்,,,, எரிக்கணும்,,,, எப்படி வெளிய கொண்டு போறதுன்னு யோசிக்கிறேன்"-என்றான்

வாட்ச்மேன் மனதிற்குள் நினைத்தான்

"பஞ்சமாபாவி,,,,,,,, ஒரு பச்ச புள்ளைய கொன்னுட்டு எப்படி பேசறான் பாரு,,,, உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா"

தினகரன் யோசித்தவண்ணம் இருந்தான்,,,,,, அவனுக்குள் ஒரு கொடுமையான யோசனை வந்தது

அதை வாட்ச்மேனிடம் சொன்னான்,,,,,,,,

அதை கேட்ட வாட்ச்மேனின் இதயம் ஒரு நொடியில் நின்று போனது

"சார் வேண்டாம் சார்,,,,, அது பாவம் சார்"- கெஞ்சினான் வாட்ச்மேன்

"யோவ் பாவ புண்ணியம்லாம் பாத்துட்டு இருந்தா நாம நாளைக்கி தூக்கு மேடை ஏற வேண்டிதான்"

"நான் என்ன சார் தப்பு பண்ணினே தூக்குக்கு போக" -தைரியமாக கேட்டான்


"ஜெனிய கூட்டிட்டு போக வந்த ரகுக்கிட்ட ஜெனி அவங்க ரிலேடிவ் கூட போயிட்டான்னு சொன்னது நீயா?? நானா??"-மிரட்டும் தோணியில் சொன்னான் தினகரன்

"வெறும் 5000 ரூபா காசுக்கு ஆசைப்பட்டு ஒரு பொண்ண கொன்னுடோமே இந்த பாவி இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா அந்த காச வாங்கிருக்கவும் மாட்டேன்,,,, இப்படியும் ஆகி இருக்காது,,,,, என்னை மன்னிச்சிடு மா,,,,,,, என் பொண்ணு ஹாஸ்பிடல்-ல இருக்காமா,,,,,,, அவளுக்காகத்தான் மா நான் பணம் வாங்கினேன்,,,,, என்னை மன்னிச்சிடுமா,,,,,, என்னை மன்னிச்சிடுமா,,,,,,,"- உதிர்ந்த மலராக கிடந்த ஜெனியின் உடலிடம் மானசிகரமாக மன்னிப்பு கேட்டார் வாட்ச்மேன்

அதற்குள் அந்த கொடூர திட்டத்தை அரங்கேற்ற தயாரானான் தினகரன்

(வளரும்,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (9-Dec-13, 11:48 am)
பார்வை : 156

மேலே