தம்பி

பெருமழை பெய்தாலும்
ஒரு துளியே முத்தாகும்
நண்பர்கள் ஆயிரம் இருந்தும் உன் நட்பே
என் வாழ்க்கையை முத்தாக்கும்
எனக்கு அண்ணன் தம்பிகள் இல்லை
அந்தக் குறையை தீர்த்தது உன் நட்பு
முகநூல் என்னும் பெருங்கடலில் இருந்து
நான் கண்ட பொக்கிஷம் உன் நட்பு
'ஹாய்'க்கும் 'பாய்'க்கும் இடையே
மன்னிப்பிற்கும் நன்றிக்கும் தடை விதித்தாய்
உன்னோடு பேசும்போது கவலைகள் மறக்க செய்தாய்
கடமைகள் உணரச்செய்தாய்
எல்லோரிடம் பழகுவதை போல் தான் பழகினேன்
எந்தப் புள்ளியில் ஏற்ப்பட்டது இந்த நெருக்கம்
எந்த ஆண்களையும் நம்பியதில்லை -முழுமையாய்
நம்புகிறேன் உன்னை உன் நட்பால்
நட்பென்ற மூன்றெழுத்தில் அறிமுகமாகி- தம்பி என்ற
மூன்றெழுத்தில் என் வாழ்க்கையில் பயணிக்கிறாய்
இந்த நட்பு இந்த உறவு என் வாழ்க்கைப் பயணம்
முடியும் வரை நீடிக்க வேண்டுகிறேன் ............

எழுதியவர் : பிரியா மணி (9-Dec-13, 11:15 pm)
Tanglish : thambi
பார்வை : 148

மேலே