என்னையும் கவிஞனாக்கு

பெண்ணே...
சுட்டுப் போட்டாலும்
எனக்கு கவிதை
எழுத வராது...

அதனால்தான்
உன்னைத் தேடி வந்தேன்...
உன் தரிசனம்
கிடைத்தோரெல்லாம்
கம்பனாகவே ஆகிவிட்டார்களாமே...?

என்னையும் ஆக்கிவிடு
அதற்காகத்தான்
இந்த மனு...
இது காதல்
கடிதம் அல்ல...!

எழுதியவர் : muhammadghouse (9-Dec-13, 9:24 pm)
பார்வை : 153

மேலே