குறைப்பீர் இயற்கையின் அழிவை

எங்களில் ஒருவன் காகிதங்களை கிழிக்க
எங்களின் அதிகாரி அதைகண்டு அவனை கிழிக்க
அப்போதுதான் புரிந்தது காகிதத்தின் பொருள்....
கா என்றால் காற்று
கி என்றால் கீதம்
த என்றால் தண்ணீர்
ம் என்றால் நிம்மதி
சுவாசத்துக்கு தரும் காற்றும்
காற்றின் கீறலில் வரும் கீதமும்
ஆவியாகி மழையாய் பொழியும் நீரும்
நிம்மதிக்காய் நிழல் ஆறும் உயரும்
வாழ்கிறது காகிதத்தில்
நாம் அழிக்கும் காகித்தால்
அழிவது நமதூர் காக்கும் மரங்கள் அன்றோ
அறிவீர் மானிடரே காப்பீர் காகிதத்தை
குறைப்பீர் இயற்கையின் அழிவை....

Save a Paper Save a Tree.....

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (11-Dec-13, 5:02 pm)
பார்வை : 181

மேலே