உந்தன் கைகள் பிடிக்கும் நேரம்

உந்தன் கைகள் பிடிக்கும் நேரம்
எந்தன் இதயம் துடிக்கும் வேகம்
என்றும் அதையே வேண்டி நிற்கும்.
இதய துடிப்பில் பாடல் பிறக்கும்.
துன்பம் ஏதும் வந்தால் தோழி நீ ஆறுதல்
அன்பு வார்த்தை போதும் அதுவும் மறைந்து போகும்.
காலை முதல் மாலை வரை முழுதும் உன்னுடன்
நாளை அல்ல வாழ் நாள் முழுதும் நீ என்னுடன்...