எதிர்பார்ப்பு

காதல் செடி
நடுவாய் என்ற
நம்பிக்கையில்
எதிர்பார்ப்பு என்ற
மண்தொட்டி
ஏந்தி வந்தேன் !
காதல்செடி கிடையாது
வேண்டுமானால்
நட்புச்செடி நடுகிறேன்
என்றாய்
தாராளமாகச் செய்
அதற்கு முன்
செத்துப்போன
எனது இதயம் என்ற
பறவையை
அந்த மண்தொட்டியில்
புதைத்து விடு