மனைவியை நேசி
மயிரிழை செறிந்த மார்பினில் சாய்ந்து
மதிமுகம் தேய்க்கும் மனைவியின் சுகத்தை
மறுமனை காணுமோ நெஞ்சம்
தெருமுனை போகும் போது
வருணனை கூட்டும்
நறுமண கூந்தலில்
வெறுமனே நின்ற என்னை
மருமகனே என்றால் உன் அன்னை
இதயம் சேர்த்து
இரவில் இறந்தேன் பெண்ணே!
மலரும் கருவில்
உன் மடிதனில் விழுந்திட!
எழுந்து பார்க்கும் எழிலழகே!
செவ்விதழ் சேர்த்து செந்தமிழ் சொல்லடி,
"என்னை கொஞ்சளிடுவாயா ?
இல்லை கோபித்து கொள்வாயா?..."