தலை வாயில் நுழை வாயில்
தலை வாயிலில் நின்றாள்
எழில் மங்கையொருத்தி
கடைக்கண்ணால் பார்த்தாள்
அழகிய வாலிபனை
அவளும் நோக்க
அவனும் நோக்க
கண்ணும் கண்ணும் பேச
அவள் வெட்கி நாண
அவன் விம்மி சிலர்க்க்
காதல் வெள்ளோட்டம் கண்டது .
தலை வாயில் நுழை வாயிலாக மாற
செம்மை படர நங்கை நல்வரவு கூற
விருப்பத்துடன் அவன் தன சம்மதம் அளிக்க
பெற்றோர்களோ தடைசொல்லி கோபம் அடைய
நிரோடை போன்ற காதல் தெளிவற்று நிற்க
அவள் கண்ணீர் சொரிய
அவன் வேதனையடைய
கண்ணும் கண்ணும் கரைய
காதல் மெல்லோட்டத்தில் வந்த வழியே திரும்பியது.