நான் தமிழன் இல்லை
நான் தமிழன் இல்லை...
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
மிதிபடுகிறது தமிழினம்...
மீன் பிடிக்க சென்றால் கடலுக்குள் சுடப்படுகிறான் தமிழன்...
படிப்பதற்கு வெளிநாடு சென்றால் அங்கேயும் சுடப்படுகிறான் தமிழன்...
என் ஆயிரம் ஆயிரம் தமிழச்சிகள் தினந்தோறும் மானபங்கபடுத்த படுகிறார்கள்,,,
உலகெங்கும் பரவிக்கிடக்கும்
என் தமிழினம் அடியோடு கருவருக்கப்படுகிறது...
தமிழனின் கரு கூட இந்த மண்ணில் பிறக்க கூடாது என கருவுற்ற தாயோடு சேர்ந்து மடிகிறது இந்த உலகை காணும் முன்னே....
இதையெல்லாம்
காணொளியில் கண்டும்,
வானொலியில் கேட்டும்,
செய்தி தாள்களில் படித்தும்
ஏதும் செய்ய முடியாமல் இருக்கும்
நான்
தமிழனா ?
இல்லை
நான் தமிழனே இல்லை...
தட்டி கேட்க திராணி இல்லாமல்
ஏன் ஒரு முத்துகுமரனை போல்
தற்கொலை செய்ய கூட தைரியமின்றி வாழும்
நான் தமிழ் மறவர் கூட்டத்தில் ஒருவனா ?
இல்லை...
நான் தமிழன் இல்லை...
ஒரு இனமே அழிவதை
காலை செய்தியில் கண்ணார கண்டு விட்டு
மூன்று வேளையும் வயிறார உண்டு கொழுக்கிறேன்
ஆம்
கொல்லப்பட்டது என் சொந்த சகோதரன் அல்லவே !
மானம் இழந்தது என் சொந்த சகோதரி அல்லவே !
நான்,
என் குடும்பம் என சுயநலமாய்
பணம் தேடி திரியும் கேவலமான பிறவி நான்...
நானா தமிழன் ?
இல்லை ...
நான் தமிழன் இல்லை...
சக மனிதன் சாவதை பார்த்து
பொங்கி வரும் கோவத்தையும் , பெருகி வழியும் கண்ணீரையும் வெளிக்காட்டாமல்
மறைத்துக்கொண்டு ,
கண்கள் சிவக்க கணிப்பொறியில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் நான்
தமிழனா ?
இல்லை...
நான் தமிழன் இல்லை...
இல்லவே இல்லை...
நான் தமிழனும் இல்லை,
இந்த உலகில் வாழ தகுதியுள்ள
மனிதனும் இல்லை....
நீங்கள் ????????

