வலித்தாலும் நடமாடும்

வலித்தாலும் நடமாடும்
இந்த மனிதன் ஏனோ
வலியோடும் நடைபோடும்
ஒரு பொம்மை தானோ

நீரூற்று தினம் ஊற்றி
காட்டாறாய் ஓடும்
நான் விதைத்த என் உழைப்பு
பெருந்தோப்பாக மாறும்

சிறு வேலி முள் வேலி
அது காத்திடதானோ
கண்விழி தரும்
நீர் துளி
அது கலங்கிடதானொ

கலக்கம் ஒரு துவக்கம்
என்று
நீ எழுந்திடதானோ

நம் முயற்சி
நமை வீழ்த்தி
தரும் பல
அனுபவங்கல்தானோ

கண் இமைக்கும் நொடியில்
பல கஷ்ட்டங்கள் வரலாம்
உன் மனதோடு பேசி
ஒரு முடிவும் பெறலாம்

போராடி தினந்தோறும்
வாழ்ந்திடதானோ
இனியேனும் ஒரு ஜென்மம்
வேண்டுமென
இறைவனை
நான் கேட்டிடுவேனோ

வாழ்க்கை என்னும் போரில்
போராடும் நெஞ்சகளுக்கு இக்கவிதை


-கலைச்செல்வி

எழுதியவர் : கலைச்செல்வி (13-Dec-13, 10:16 pm)
பார்வை : 81

மேலே