இல்லையென நம்புகிறேன்

எங்கே போனாய் கிருஷ்ணா ??..

உன் தங்கை திரௌபதி துகிலுரிய படும் போது மட்டும் உரிய உரிய நீளும் துகில் தந்து காத்தாயே....

இன்று என் ஆயிரக்கணக்கான சகோதரிகள் துகிலுரிய படுகிறார்களே ?
அவ்வளவு நீண்ட சேலை தந்து காக்க வேண்டாம் , ஒரு கைக்குட்டையளவு கொடுத்து மானம் காத்திருக்கலாமே .....

நீ இருந்தும் இந்த அவலம் நடக்கிறதென்றால் அது உனக்கு "காக்கும் கடவுளுக்கு காவல் காக்க கையலாகவில்லையென்ற அவமானம்"....
அதனால்
நீ
இல்லையெனவே
நம்புகிறேன் நான்.....

எழுதியவர் : சத்யாவிக்னேஷ் (14-Dec-13, 12:25 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 72

மேலே