மாலை நேரத்து மயக்கம்

தண்ணீருக்குள்
கல்லாய் இருந்த
என் மனது
கண்ணீரால் கரைந்து
கிடக்கின்றது
அன்பே உன்
காதல் வேண்டி....!!!

ஆனால்,
உன்மனமோ
கல்லாய் இருக்கிறதே
காசு வேண்டி....!!!

என் மனதை
ஏன் கரைத்தாய்...?
காதல் விதை
ஏன் விதைத்தாய்...?

கண் முன்னே
நீயிருந்தும்
நீரிருந்தும்
எல்லாம் கானல் நீராய்
தோன்றுதடா....
காதல் காலநிலை
போன்றதடா...???

எழுதியவர் : நா.நிரோஷ் (14-Dec-13, 6:01 pm)
சேர்த்தது : கவிநிலவு
பார்வை : 372

மேலே