பணம் இல்லையேல் மரியாதை இல்லையே

முதலில் பிறந்தேன் நான்
மூத்தவனாய் நான் அன்று !
முதல் மகன் என்பதனால்,
கொஞ்சி மகிழ்ந்தனர்
பெற்றோர் முதல் உற்றார் வரை!

உறவுகள் பல உண்டு எனக்கு !
என் பிறப்பினால் பிறந்தோர்
இருவர் உண்டு எனக்கு !
எல்லையில்லா அன்பு வைத்து
என்றென்றும் இருந்தேன் அன்று நான் !
அன்று முதல் இன்று வரை
என் உள்ளம் அன்றுபோல் இன்றும் .

செல்வம் என்ற கல்வியை கற்று
முதலில் வேலைக்கு சேர்ந்தேன்
மூத்தவனாய் பிறந்ததால் அன்று !
பெற்ற சன்மானத்தை
பெற்றோரிடம் கொடுத்து
போய்வரும் பயனசெலவை மற்றுமே
பெற்று வந்தேன் நான் அன்று !
குடும்ப பொறுப்பை ஏற்று அன்று நான் !!

இளையோர் கல்வியை பாதியில் விட
பக்குவமாய் நான் எடுத்து சொல்ல
ஒருவன் கல்வியை பாதியில் துறந்தான்
இன்னொருவன் துறந்த கல்வியை
மீண்டும் கற்றான் அன்று !
துறந்தவனும் , கற்றவனும்
அயல் நாடு சென்று
அவனவன் தகுதிக்கு ஏற்ப
தக்க சன்மானம் பெற்று
அவனவன் பெற்ற கடனை அடைத்து
அவர்களுக்கு தேவையான பொருளை
வாங்கினர் அன்று !!
நானோ குடும்ப பொறுப்பை ஏற்று
பெற்ற சன்மானத்தை குடும்பத்திடம்
முழுவதும் கொடுத்து பெரும் பயனாய்
அன்று நான் !!!

இன்று இனி
தொடரும் (பகுதி 2)

என்றும் அன்புடன்
எல்விஸ் ராஜு

எழுதியவர் : எல்விஸ் ராஜு (14-Dec-13, 6:51 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 115

மேலே