செல்பேசி CELLPHONE

என்னவளே ...
செல்லும் இடமெல்லாம் கொண்டு -
பேசுவதாலோ செல்பேசி என்கிறோம் - ஆனால்
என்னவளின் குரலை கேட்காதவரை - இது
செல்லா பேசி என்பேன் !...

செல்போனின் அருமை - பெண்ணே
உன்னைக் காணாதவரை எனக்கு தெரியவில்லை
என்னவளின் குரலை கேட்க
என்னக்குள் உள்ள செல்களின் தவிப்பு
உனக்கு புரியவில்லையோ என்னவோ ?
என் காதில் ஒலிக்கவில்லை இன்னும் அவள் குரல்!

என் கண்களில் கண்மணியின் உருவமும்
அவள் பார்த்த கடைக்கண் பார்வையும் - என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துப்போனது!
அவளோடு பேச விரும்பினால் - என்
மனதோடு பேசிக்கொள்கிறேன்
அவள் குரல் கேட்கும் வரை ...

அன்புடன் ...
SRS

எழுதியவர் : சுரேஷ்.G (14-Dec-13, 9:23 pm)
சேர்த்தது : sures
பார்வை : 108

மேலே