கிடைக்கப் பெற்ற வரம்

உண்மையில் ரசித்தபோது பாதையோர பூக்களை
உச்சி வெயில் நடைபாதையில்
உவகையாய் உணர்கிறேன் மனசில் நிழலை....

சிறு மழலையின் சிரிப்பு அது - நம்
சிந்தனைகளின் வண்ண வனப்பு அது..
சிறந்து விளங்குகிறது இந்த உலகு

கொட்டுது வியர்வை புற உடலில் - தேனருவி
கொட்டுது தமிழ் ரசனையதால் - நான்
கொடுத்து வைத்ததே இம்மண்ணில் மனித உரு...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Dec-13, 4:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே