சந்தோசம் எப்போது

சந்தோசம் எப்போது

விளையாட்டில்
தோல்விகளை வீழ்த்தி
வெற்றிக்கோப்பையுடன்
உன் முன்னாள்-நின்றபோதா?

பட்டங்கள் பலபெற்று
சான்றோன் வாக்கில் மேதையாய்
பட்டயங்களை
உன் கழுத்தில் அணியும் போதா?

பணத்தின்
மதிப்பறியா வயதில்
பலநூறு ரூபாய்களை
உன் காலடியில் - சமர்பிக்கும் போதா?

பரம்பரையின்
பெயர் சொல்ல
எந்தன் வாரிசு - உந்தன்
மடிதனில் கொஞ்சிவிளையாடும் போதா?

மகனே
ஆயிரம் சந்தோஷம்
உன்னால் நான் அடைந்தாலும்
மறக்க முடியா சந்தோஷம் இரண்டு தான்

பிறந்த குழந்தயாய்
எந்தன் மடியில் நீ அழுகையிலும்
அருந்த கிழவியாய்
உந்தன் மடியில் நான் இறக்கையிலும்......

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (15-Dec-13, 3:02 am)
Tanglish : santhosam eppothu
பார்வை : 148

மேலே