கேட்பது தவறில்லை

காதலிக்கிற சரி அதுக்காக நான் போற இடத்துக்கெல்லாம் ஏன்டா பின்னாடியே வர்ற ???

நீங்க பாத்தா ஒடனே உங்களுக்கு காதல் வந்திடுது அதுக்காக எங்கள ஏண்டா Love பண்ண சொல்லி தொந்தரவு பண்றீங்க....உங்க அக்கா இல்ல தங்கச்சி பின்னாடி இப்படி யாராவது சுத்துனா நீங்க சும்மா விடுவீங்களா ....

ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ காதல் தானா வரணும் நீங்க பின்னால சுத்திரதுனால வரக்கூடாது ...இத நீங்க எப்பதான் புரிஞ்சிக்க போறிங்களோ தெரியல...

தயவு செஞ்சி இனிமே என்ன follow பண்ணாத please....

இன்று ....

டேய் நேத்து தானடா அவ்வளவு நேரம் frindly யா சொல்ற மாதிரி சொன்னே திரும்பவும் ஏண்டா என்ன follow பண்றா...?

தயவு செஞ்சி புரிஞ்சிக்கோ please எனக்கு உம்மேல காதல் வராது ...அதே மாதிரி எனக்கு உன்ன பிடிக்கல போதுமா ???

கற்பனையில் நாளை...

உன்னோட பெயர் என்ன...
என்ன படிக்கிற...
ஒ அதனால தான் பின்னாடியே சுத்துரியா ...
வேலை கிடைக்குமா?
சரி வா எங்க வீட்டுக்கு ...
எதுக்கு பயப்படற...
என்ன love பண்ற..உங்கவீட்ல permission வாங்கிட்டியா எனக்கு தெரியாது ஆனா எனக்கு எங்க வீட்ல permission கேட்டு தான் ஆகணும் ....

என்ன காதலிக்கிற தைரியம் இருக்கு ஆனா என்ன பெத்தவங்க கிட்ட பேசணும்ன்னு சொன்னா மட்டும் உங்களுக்கு...வேலை இருக்கணும் அதுக்கப்புறம் வந்து பேசுவிங்க...அப்போ நாங்க மட்டும் வேலை இல்லாத உங்கள காதலிக்கனும் ...இது என்னடா நியாயம் ???

அவள் கேட்பது சரிதானே ???

பெண்களிடம் தைரியமாக காதலை சொல்லும் ஆண்கள் சிலருக்கு பெண்களின் பெற்றோரிடமும் பேசும் தகுதி இருந்தால் தானே காதலோடு கல்யாணமும் நடக்கும் ???

அவள் உன்னை தேர்ந்தெடுக்க பயப்படவில்லை...
தேர்வில் நீ கண்டிப்பாக வெற்றியை பெற வேண்டும் என்ற காதலோடு சொல்கிறாள்...

வெற்றியை தேடு ....
வீரநடை போடு....

வெற்றி திலகமிட அவள் உன் வாசலில் காத்திருப்பாள்....காதலோடு...

எழுதியவர் : சாமுவேல். (16-Dec-13, 10:49 am)
பார்வை : 245

மேலே