மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் - மார்கழிக் கவிதை நான்கு

எல்லாம் நிறைந்து வந்தால்
எழில்தானே வாழ்வினிலே
என்றே
என் வீட்டுக் கேலண்டர் தேதி
எனக்குக் டாட்டா காட்டியது நேற்று.....

எனவே இன்று.....

மார்கழித்
திங்கள்
மதி நிறைந்த நன்னாள்.....!

ஆம்....!

புதுமாதம் மார்கழி பிறந்து
பூரிக்கும் திங்களாய்
பவுர்ணமி இன்று
பால் வார்க்கப் போகிறது நம் விழி வழியே மனசுக்குள்.......!

மனசென்று வானைச் சொன்னேன்
மலரட்டும் நிறைகள் என......

நிறைகளைப் புரிந்து கொண்டால்
நிம்மதியே ஒளி வீசும்... - முழு

நிலவினையே காணுங்கள் - வானில்
நிச்சயமாய் நிறை தெரியும்....!

குறைகளையும் நிறையாக்குவோம் - இறை
கும்பிட்டே மானுடப் பிறவி போக..

கோதை ஆண்டாள் வழி சொன்னாள் - தூய
கோலாகலம் இறை வழிபாடென்று....

கொண்டாடி மகிழுவோம் நாம் மனதினிலே
குழந்தையென அன்பே தெய்வமென.....

நிறையட்டும் இன்பங்கள் உங்கள் வாழ்வில்
நிறைவான இம் மார்கழி மாதம் தொடங்கி.......

என்றே வாழ்த்தியபடி
என்றும் அன்புடன் ஹரி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Dec-13, 2:22 pm)
பார்வை : 194

மேலே