அழகிய மழையிலும் உன் நியாபக தூறல்

ஓய்ந்த பகலில் பெய்த மழையில்
மனதில் உன்சாந்த முகத்தின் ஞாபகமே...

சலசலவென கொட்டும் மழையில்
கலகலவென்ற மழலைச் சிரிப்பின் ஞாபகமே...

பளீரென மின்னும் மின்னல் - அறியாத தருணத்தில் தெரியாமல்விட்ட அறையின் ஞாபகமே...

கணீரென முழங்கும் இடியில்
தத்தித்தாவி நடந்தபோது விழுந்தசத்தம் ஞாபகமே...

என்வண்டிக் கண்ணாடிவழி வடிந்த நீரில்
கத்திக்கதறி விட்ட உன் முத்துக் கண்ணீர் ஞாபகமே...

வடியும் வெள்ளம் காலை நனைத்தோட
படுத்தபாயில் என்னெஞ்சில் அடித்த சிறுநீர் ஞாபகமே...

ஓய்ந்தமழையில் எனைத் தழுவிய ஈரக்காற்று
கட்டித்தழுவி நீ நெற்றியில் இதழ்பதித்த எச்சில் ஞாபகமே...

மழையும் ஓய என் நெஞ்சம் உன் நினைவில் ஏங்க
நியாபகமே வா மீண்டும் நிஜத்தில் அள்ளித்தா...

உன் பிஞ்சுப்பாதம் தழுவத் துடிக்கும் ஒரு இதம்
உனக்காய் வடித்த கவிதையிது என் அன்பு மகனே...

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (16-Dec-13, 2:06 pm)
பார்வை : 4862

மேலே