ஜொலிப்பாய் ஓர்நாள்

சொந்தக் கவிதை -8

சோதனை மேல் சோதனை
போதுமையா சுவாமி என்றேன்
நீ தங்கம்டா புடம் போடப்போடத்தான்
ஜொலிப்பாய் என்றான் என்கண்ணன்.

ஜொலித்ததுபோதும் முடியவில்லை என்றேன்
அவனோ நீ பிறக்கும் முன்
பணமா குணமா எனக்கேட்டேன்
நீ தங்கக்குணம் வேண்டும் என்றாய்

எழிதில் வருவதில்லை தங்கக்குணம்
இன்னும் நீ பக்குவப்பட வேண்டும்
வை என்மேல் நம்பிக்கை
ஜொலிப்பாய் ஓர்நாள் எனக்கூறி மறைந்தான் .

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (16-Dec-13, 7:43 pm)
பார்வை : 90

மேலே