தோழன்

என்னோடு நீ, தவறு..
உன்னோடு நான், தவறு...
நம்மோடு நாம் இருக்கையில்,

உன் காந்தப் புலத்தில் நான் இரும்பாவேன்,
என் காதல் புலத்தில் நீ எறும்பாவாய்!
இரும்பு எறும்பாவதும் எறும்பு இரும்பாவதும்,
காதலில் மட்டுமல்ல நட்பிலும் சாத்தியம்!!

கணிதத்தில் நீ அறிவிலி,
எனக்கு செலவிடுகையில்!
மனிதத்தில் நான் குறைவிலி,
உனக்கு செவிமடுகையில்!!

முகநக நட்ப்பதை தப்பென்று எண்ணுவோம்!
இரட்டைப்பிறவி போல், நட்பில் பிணைவோம்!!
தகதக தங்கமாய் என்றும் மின்னுவோம்!
இரட்டைக்கிளவி போல், என்றும் இணைவோம்!!

இருவரும் ஓர் நிறை, நம்மிருவரும் ஓர் நிலை!
இனிவரும் காலம் வரை, எவரினும் மேல் நிலை!!

நட்பே! என் நட்பே!! செழிப்பே! உன் இருப்பே!!

எழுதியவர் : அகமுகன் விஜய் (18-Dec-13, 1:42 pm)
பார்வை : 164

மேலே