கோலம்

அதிகாலையில்
நீ,
வாசல் தெளித்து
புள்ளிகள் இட்டு
கோலம் வரைகிறாய்
நான்,
காதல் தெளித்து
கண்கள் இட்டு
உன்னை வரைகிறேன்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (19-Dec-13, 4:50 am)
Tanglish : kolam
பார்வை : 91

மேலே