விருதுகள் -2013 நட்புணர்வு மிளிர் வரியாக்க நன்மணி -2013

தோழமை நெஞ்சங்களே..

வணக்கம்

2013 சனவரி திங்களில் உறுப்பினராகி அல்லது அதற்கு முன்போ அப்போது முதல் தளத்தில் படைப்புகள் அளித்தும் கருத்துகள் அளித்தும் வரும் படைப்பாளிகளின் அடையாளங்களுக்கும் அங்க்கீகாரத்திற்குமான ஒரு முயற்சியே இந்த பன்வகை விருதளிப்பு ஆகும்.

இவ்விருதளிப்பு ஆய்வு ரீதியாக 2012ல் தொடங்கப்பட்டது. ஒரு வித ஊக்கமளிப்பே விருதுகள்...

கற்பனையாற்றல் மிளிர்தல் மட்டுமா ஒரு படைப்பாளனின் அடையாளம்.? கருத்துரைப்பில் கனிவும் நக்கீரப் பார்வை சில சமயங்களிலும் ....என முகங்காட்டும் படைப்பாளியாகவும் இருத்தல் மொழி சிதைவு கருத்துப் பிழை நீக்கம் போன்றவற்றிக்கு அரு மருந்தாகவும் இருக்கும் இல்லையா...?

அன்றியும் இவற்றின் ஊடே மானுட அன்பும் சினேகித பசையொட்டுதலும் சந்து செய்வித்தலும் ஒரு படைப்பாளியிடம் இருப்பின் அது தளத்தின் அமைதி சக படைப்பாளிகளிடம் ஒரு இணக்க இறுக்கப் பிணைப்பு போன்றவற்றிக்கு ஊன்று கோலாகவும் இருக்கும் என்பதால் அவ்வகையில் 2014ஆம் ஆண்டின் முதல் வித்தாக இவர்கள் 2013ஆம் ஆண்டின் "நட்புணர்வு மிளிர் வரியாக்க நன்மணி -2013 " எனும் விருது பெறுகின்றனர்.

****************************************************************************தோழர்கள்

@@@@@@@@ எழுத்து சூறாவளி @@@@@@@

@@@@@@@@ ரத்னமூர்த்தி கவிதைகள் @@@@

$$$ "நட்புணர்வு மிளிர் வரியாக்க நன்மணி -2013 " $$

எனும் விருது பெறுகின்றனர்.

****************************************************************************

வாழ்த்துவோம் வாரீர்...!!!

எழுதியவர் : அகன் (19-Dec-13, 7:38 am)
பார்வை : 211

மேலே