புதுமைப் பெண்
கண்ணீரில் தாகம் தீராதடி.....
மடமையை கொளுத்தி
மணமேடை சுற்றி வந்திடு......
கைம்பெண்ணாய் நிற்பது கைராசியல்ல
அது இயற்கை இழைத்த நியதி
தலைமூழ்கி தாலி ஒன்றை ஏற்றிடு .....
பாரதி தேடிய புதுமைப்பெண்ணே ..
பூட்டிய கதவை திறந்திடு...
வாடிய பூவை மறந்திடு....
குங்குமம் தான் இட்டுக் கொள்ளடி ...
அடுத்தவர் வசைப்பாட்டுக்கு காதை பூட்டிக்கொள்ளடி ....
புது வாழ்க்கை பிறந்திடுச்சு பெண்ணே
புத்தாடை கட்டிக்கோ என் தமிழ்ப் பெண்ணே .....
கண்ணாடி வளையலும்
ஜதிபாடும் கொலுசும்
கச்சேரி நடத்த காலம் வந்ததடி
பெண்ணே என் தமிழ்ப்பெண்ணே....
பட்டமரம் பூத்துக் குலுங்க
பூப்பரித்து பூச்சூட
புதிதாய் பிறந்திடு பெண்ணே
என் தமிழ்ப் பெண்ணே.....