உணர்வுகள் சில உனக்காய்,,,, டைரியில் உறங்கியவை - பழசு பழசு
உணர்வுகள் சில உனக்காய்,,,, (டைரியில் உறங்கியவை - பழசு பழசு)
உன்னை உணர்ந்தது போல்நான்
யாரையும்
உணர்ந்ததும் இல்லை,,,
உன்னை பார்க்காத இந்த விழிகள்
துளி உறங்கியதும் கூட இல்லை,,,,
உன்னை சுவாசிக்கும் பொழுதினை கூட
சுகமாக நினைக்கிறேன்,,,
என் உயிர்வரை உன்னை
நினைத்து நினைத்து,,,மகிழ்கிறேன்,,,
என் உயிர் துறந்தாலும்,,,
உனக்கென துறக்கிறேன்,,,
துறவியாய் போ என்று
சொன்னாலும் போகிறேன்,,,
இல்லை உன் ஆவியாய்
தொடர்ந்துவிடு
என்றாலும் தொடர்கிறேன்,,,
என் இந்த ஜென்மம் அது உனக்காக,,,
முடியும்வரை நான் காத்திருப்பதும்,,,
உன் ஓர பார்வைக்காக,,,,
மன்னித்துவிடு பிழையிருந்தால்,,,
மறந்துவிடு,,,,
என்னை நேசிக்காமல் இருந்தால்,,,
ஆம்,,,,
திருடனாய் கூட வாழ ஆசைபடுகிறேன்,,,
உன் இதயம் திருடுகிறக் கள்வனாய்,,,,
நீ சம்மதித்தால்
வாழ்நாள் முழுவதும்,,,,
இல்லையென்றாலும்,,
இன்னொரு ஜென்மம் எடுப்பேன்,,,
உன்னை காணவே நான்,,,,,,
அனுசரன்,,,