எத்தனை காலம்தான் ஏமாந்து கிடப்போம்

எத்தனை காலம்தான் ஏமாந்து கிடப்போம்?

முதுகுத் தண்டும்தான்
முன்வயிற்றில் பதிஞ்சாச்சு
பட்டினி சாவும்தான்
தூக்கம்போல் நெனச்சாச்சு

கைப்பிடி அரிசிக்குத்தான்
பேயாக பறந்தோமே
காசுக்காக ஓட்டயும்தான்
வித்தகதை மறந்தோமே

அறிவியல் வளர்சியால
நெலவுலையும் காலவச்சான்
அரசியல் சூழ்ச்சியால
விலைவாசியங்கே தூக்கிவச்சான்

காடுகரை காலத்துல
பசிக்குத்தான் தண்ணியாச்சு
கட்டிட காலத்துல
தண்ணியும்தான் காசுமாச்சு

உழுதுண்ணும் காலமுந்தான்
காற்றாக ஓடிப்போச்சு
தொழுதுண்ணும் வாழ்கையும்தான்
சொம்பலாலே தேடியாச்சு

குடிக்கு அடிமையாகி
குப்புற விழுந்தோமே
எல்லாம் போனபின்னே
கதறி அழுதோமே

பத்தினி தாயும்தான்
தெருமுனையில் நின்னாளே
தன்னை நித்தம் கொன்னேதான்
பிள்ளைகளை காத்தாளே

சிதறிய செந்நீரால்
செவ்வானமும் உண்டாச்சு
சிந்திய கண்ணீரால்
பெருங்கடலும் உப்பாச்சு

வெள்ளைக் காரனைத்தான்
வெரட்டி அடிச்சோமே
அதுல ஒருத்தியத்தான்
தூக்கி பிடிச்சொமே

சனத்தொகை நூறுகோடி
தாண்டிபல காலமாச்சு
அதில் - நல்லபய நாலுபேரு
தேடலும்தான் காணாபோச்சு

எத்தனை காலம்தான் ஏமாந்து கிடப்போம்?

உத்தமனா ஒருத்தன்தான்
உச்சிக்குப் போனாலே
காஞ்ச வயிறுந்தான்
நனையும் தேனாலே

எழுதியவர் : சண்முகானந்தம் (19-Dec-13, 3:12 pm)
பார்வை : 724

மேலே