தீயும் பனிமழையாய் மாறும் உன் பார்வையில் 555
உயிரே...
விடாமல் மழைத்துளிகள்
மண்ணை தொட்டாலும்...
மண்ணின் மனம்
மண்ணைவிட்டு போவதில்லை...
விடாமல் என்னை
நீ வெறுத்தாலும்...
உன்னை என் மனம்
வெறுக்க போவதில்லை...
பூக்களின் மனம்
தென்றலில் மிதந்து
செல்லும் இடம் விட்டு...
என்னில் கலந்த
உன் உள்ளம்...
உன் பாதையை தொடர்ந்தே
என் பயணமும்...
என் உயிரே உனக்காக
வாழும் என்னை...
ஒருமுறை பாரடி
திரும்பி...
என்னை நீ
திரும்பி பார்க்க...
நான் தீயில்
கருகுவேனடி...
உன்னை திரும்பி
பார்க்க வைக்க...
நீ திரும்பி
பார்க்கும் நேரம்...
தீயும் பனிமழையாய்
எனக்கு மாறுமடி அந்த விநாடி...
தொடர்ந்து வருவேன்
நீ என்னை தொடவே...
நான் தீயில்
கருகும் வரை.....