மாஸ்டர் - ஒரு பக்க கதை
மாஸ்டர் - ஒரு பக்க கதை
**************************************
''என் டீக்கடையில எந்த சரக்கு மாஸ்டர் வந்தாலும் ரெண்டு
மூணு நாள்ல போயிடறாங்கப்பா. அதனால வியாபாரமே
படுத்திடுச்சு'' நண்பர் கேசவனிடம் சொல்லி வருத்தப்பட்டார
சண்முகம்
-
''னக்குத் தெரிஞ்ச ஒரு மாஸ்டர் இருக்கார், பஜஜி, வடை
பக்கோடா எல்லாமே நல்லா போடுவார். அவர் கை
மணத்துக்காகவே கூட்டம் கூடும் பாரு''என்று சொல்லி,
அடுத்த நாளே அவரை அழைத்து வந்தார் கேசவன்.
-
ஏற்கனவே இருந்தவருக்குக் கொடுத்ததைவிட அவருக்குக்
கூடுதல் சம்பளம் கொடுத்து வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
-
ஆனால் அவரும் மூன்றே நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல்
வேலையை விட்டு நின்றுவிட்டார்.
-
கேசவனுக்குக் காரணம் புரிந்துவிட்டது. அடுத்த நாள் கட்டு
மஸ்தான பாடியோடு ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை கடைக்கு
அழைத்து வந்தார்.
புரியாமல் விழித்தார் சண்முகம்.
-
'சண்முகா, உன் கடைக்கு எதிரே டாஸ்மாக் இருக்கு. அங்க
குடிச்சுட்டு உன் கடையில வந்து பலர் சண்டை போடுறாங்க.
அந்த அடிதடிக்கு பயந்துக்கிட்டுதான் எந்த மாஸ்டரும் உன்
கடையில நிலைக்கிறதில்ல. இவரைப் பார்த்த பிறகு யாரும்
உன் கடையில சண்டை போடமாட்டாங்க. இவருக்கு
சண்டை போடவரும். பஜ்ஜி, பக்கோடா போட நீ சொல்லிக்
கொடு!'' என்றார் கேசவன்.
-
பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்ததில் சந்தோஷம்
காட்டியது சண்முகம் முகம்
-
=====================
>மா.கமலவேலன்