வாழ்த்தனும் உன்னை பூமியடா

பிறந்திட்ட குழந்தையை
பெயரிடாத காரணத்தால்
அதுஇதுவென அழைக்கின்றோம் !

இறந்திட்ட மனிதனை
பெயர் இருந்தும் அறிந்தும்
பிணம் என்றே சொல்கின்றோம் !​

​மனித உயிரின் மதிப்பறியா
மூடர்கள் சிலரோ பறிக்கின்றனர்
கொடூர கொலையால் !

மனித தலையை சாய்ப்பதோ
மண்ணில் நடக்கிறது இன்று
மணிக்கு ஒன்றாய் இங்கு !

மதியினை நொடியில் இழக்கும்
மாந்தரே சிந்திப்பீர் சிறிதேனும்
மனித தலையென்ன மரக்கிளையா !

கொலை புரிதல் கொள்கையெனில்
புத்தனும் காந்தியும் பிறந்த மண்ணும்
குருதியில் நனைவதும் நீதியோ !

வாழ்ந்து சாதிக்கனும் மானிடா
வீழ்த்தி வாழ்வதும் வாழ்க்கையா
வாழ்த்தனும் உன்னை பூமியடா !

கோபமும் கொலைவெறியும் தவிரடா
பொறுமையும் அமைதியும் கொள்ளடா
தூற்றிடும் உலகமும் உனை போற்றுமடா !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Dec-13, 10:44 pm)
பார்வை : 248

மேலே