எழுந்து வா தோழா
வானவில் ஒரே நிறத்தில் இருந்தால்
நீ அதை ரசிப்பாயா?
வீசும் காற்றில் புயல் மட்டுமே இருந்தால்
நீ ஏற்று கொள்வாயா?
கேட்கும் ராகங்களில் ஒரே மாதிரியான
கீதங்களை மட்டும் நீ கேட்பாயா ?
பார்க்கும் திசையெங்கும் ஒரே மாதிரியான
உருவகம் இருந்தால் நீ உன் கண்களை
திறந்து வைப்பாயா?
உண்ணும் உணவில் கூட ஒரே சுவை மட்டும் வைத்தால் நீ உன்னுவாயா.....?!!!
காணும், கேட்க்கும், சுவைக்கும் ஒவ்வொரு
பொருளிலும் பல சுவைகள் கேட்க்கும்
நம் மனத்தால்
என் வாழ்க்கையில் மட்டும் மகிழ்ச்சி என்னும் ஒரே சுவையையை மட்டும் கேட்கிறோம்..........?
சிந்தித்து பாருங்கள்...
வாழ்கைக்கூட
சந்தோசம், துக்கம், கண்ணீர், புன்னகை, கசப்பு...
என பல சுவைகள் இருந்தால் தான்
இனிக்கும்......
தடைகளை உடைத்து பார்ப்போம்
நீ தடுமாற நேரம் கிடைக்காது....
இது நம் வாழ்க்கை
கொஞ்சம் போராடித்தான் பார்ப்போமே!
எழுந்து வா தோழா....!!