பகுத்தறிவு

மதம் கொடியது என்பான்
மதம் பிடித்தவன் போல் !
கொடியது மதம் இல்லை
மனித மனம் என்பேன் !
இவர்கள் கடவுளை நிராகரிப்பதில்லை
கருணையை நிராகரிக்கிறார்கள்!
அன்பை சிவமாக போற்றுபவர்க்கு - மதம்
ஏதடா மானிடா?
பிறர் பாவங்களை மனிப்பவர்ர்க்கு - மதம்
ஏதடா மானிடா?
கருணை உள்ளம் படைத்தவர்க்கு - மதம்
ஏதடா மானிடா?
பரம்பொருள் தன் மதத்தில் இல்லை - என்று
அறிவான் எவனோ?
அவனே பகுத்தறிவாளன் !!

குற்றங்கள் பல செய்வார்
தன்னவர்களில் தான் உயர்ந்தவன் என்பான் !
சகட்டுமேனிக்கு சாஸ்திரம் பேசுவார்
சாக்கிடையை சுத்தம் செய்யாமல்!
ஆயுதமேந்தி கெடுப்பார் உண்டு!
இவர்கள் ஆயுதமில்லா அரக்கர்கள்!
அறம் நெறி தெரியாமல் வாழ்வார் பலருண்டு!
ஆன்மீகவாதி என்று கூறிக்கொண்டு!
மத போர்வையை ஏந்திக்கொண்டு
இவர் செய்யும் சூழ்ச்சிகள்
சூனிய காரர்களையும் மிஞ்சும் !
அக்கடவுளையும் கல்லாக்கும்!
மானுடமையை முடமாக்கும்!
வேதங்கள் அறியும் மனிதனவன்
பேதங்கள் பார்ப்பதில்லை!
பேதங்கள் கொள்ளும் மூடர்கள்
பிணங்கள் என விழிப்போம்!

சீடர் மூடர் வேற்றுமையை அறிவோம் !
பக்தியை போற்றுவோம்!
பகுத்தறியும் குணத்தை கொள்வோம் -
பாதகமில்லா வாழ்க்கைக்கு வழி வகுப்போம்!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (21-Dec-13, 1:03 pm)
பார்வை : 107

மேலே