கழுதையும் கடவுளும்

ஒரு குயவன் கடவுளின் உருவ பொம்மைகள் செய்து அருகில் இருக்கும் நகரத்திற்குச் சென்று விற்று வந்தான். நவராத்திரி பண்டிகை நெருங்கி வந்து கொண்ருந்த சமயம் ஆகையால் பல கடவுள்களின் திருவுருவ பதுமைகள் பெரிதாய் செய்து, அவைகளை தன் நான்கு கழுதைகளின் மீது ஏற்றி பல குக்கிராமங்கள் வழியாகக் சென்று கொண்டிருந்தான்.

பதுமைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததால், வழியில் வருவோர் போவோர் நின்று அந்த கடவுளின் பதுமைகளை வணங்கிச் சென்றனர்.

குயவனும் நகரத்திற்கு சென்று அனைத்து பதுமைகளையும் விற்று கைநிறைய பணத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்தான். வழியில் வருவோர் போவோர்களைக் கண்டால் கழுதைகள் நின்று, அவர்களை உற்று நோக்கி ஒருமுறை கத்தியது. எவரும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தனர். நகரத்திற்கு செல்லும் பொழுது தன்னைக் வணங்கிய மனிதர்கள் ஏன் திரும்பிவரும் பொழுது கும்பிடவில்லை என்ற எண்ணத்தில், ஒவ்வொருவரைக் காணும் பொழுதெல்லாம் உரத்த குரலில் கத்தத் தொடங்கின. குயவனுக்கும் மற்றும் நடந்து செல்லும் ஒருவருக்கும் ஏன் கழுதைகள் திடீரென இவ்வாறு செய்கின்றன என்று புலப்படவில்லை. கழுதைகள் இடும் சத்தம் கேட்கப் பொறுக்காமல், குயவன் கழுதைகளை கம்பால் அடிக்க, அவைகள் மீண்டும் கத்தத் தொடங்கின. கழுதைகளின் நாராச ஓசையில் வெகுண்ட மக்களும் அதன் மீது கற்களை வீசியெரிந்தனர்.

பாவம் .. அந்தக் கழுதைகள் கடவுளின் உருவ பொம்மைகளை ஏற்றிச் செல்லும் பொழுது . கும்பிட்ட வருவோர் போவோரெல்லாம் தன்னைக் கடவுள் என்று நினைத்தது தான் கழுதைகள் செய்த தவறாயிற்று.

எழுதியவர் : (21-Dec-13, 2:12 pm)
பார்வை : 154

மேலே