~~ உறவு ~~
அன்பு காட்டி அரவனைத்ததால் அன்னை என்பதா
தவறு செய்த நேரத்தில் தண்டித்ததால் தந்தை என்பதா
தோல்வியிலும் தோள் கொடுத்ததால் தோழி என்பதா
விளையாடி சண்டையிட்டால் தமக்கை என்பதா
குறைகள் களைந்து ஞானம் ஓட்டியதால் குரு என்பதா
உறவுகள் சொல்லி பிரிக்க மனம் இல்லை
உயிரின் உள்ளே உறைகிறிர்கள் என்று சொல்லி உளம் மகிழ்கிறேன் !!!!!