குழந்தையுடன் தாய் தற்கொலை

சொந்தக் கவிதை -16


மானிடராய் பிறந்திட வேண்டுமென இறைவனிடம்
கேட்டேன் உன்னுள்ளே என்னைகலந்துவிட்டார் .
நாட்கள் முன்னூரு உனைவருத்தி
அற்புதமாய் உன்னுள்ளே எனைவளர்த்தாய்

தாங்கமுடியா வலியையும் தாங்கிநீ
புவிஉலகத்திர்கு மகிழ்வுடனே கொண்டுவந்தாய்
உன்உதிரத்தை பாலாக்கி நாளும்எனக் கூட்டி
சீராட்டி சிங்கரித்துசந்தோசமாய் வளர்த்துவந்தாய்

இப்படி ஓர்தாய் எனக்கமைந்தது
என்பாக்கியம் எனஎண்ணி மகிழ்ந்திருந்தவேளையிலே
சிறிய பிரச்சனைக்கு எத்தனையோ வழியிருந்தும்
என்னையும்உன்னையும் கொடூரமாய் ஏன்கொன்றாய்?

தவமிருந்து கிடைத்த வாழ்க்கையை
ஏன்அழித்தாய் என்தாயே உன்னை வளர்க்க
எத்தனைதியாகம் உன்தாய் செய்திருப்பாள்
ஒருகணம் சிந்திக்க ஏன்மறந்தாய் என்தாயே

அன்பின்இலக்கணமே தாய்எனும் சொல்லுக்கு
மாசுவரும்படி ஏன்செய்தாய் என்தாயே?
இறைவனும் உன்னை மன்னிக்க மாட்டார்
என்பதனை ஏன் மறந்தாய் என்தாயே?

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (21-Dec-13, 8:46 pm)
பார்வை : 62

மேலே